நிலநடுக்கத்திலும் செய்தி வாசித்த செய்தியாளர்

by Staff / 23-03-2023 01:42:57pm
நிலநடுக்கத்திலும் செய்தி வாசித்த செய்தியாளர்

வட இந்தியா உட்பட அண்டை நாடான பாகிஸ்தானில் செவ்வாய்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கம் அங்குள்ள மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதனால் கட்டிடங்கள் பலவும் குலுங்கின. இந்நிலையில், பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள டிவி ஸ்டுடியோ தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. செய்தியாளர் ஒருவர் செய்தி படித்துக் கொண்டிருந்த போது, ​​நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடம் திடீரென குலுங்கியது. இருப்பினும், அவர் செய்தி வாசிப்பை நிறுத்தவில்லை. இதை பார்த்த நெட்டிசன்கள் அவரது தைரியத்திற்கு தலைவணங்குவதாக தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via