மாணவி சாவில் காதலன் கைது

by Staff / 01-04-2023 04:44:20pm
 மாணவி சாவில் காதலன் கைது

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டி என் பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி தண்டு மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள தனியார் விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் சாக்கு மூட்டையில் கைகால் கட்டப்பட்ட நிலையில், நேற்று மாலை 21 வயதுள்ள பெண் சடலம் ஒன்றை தகவலின் பேரில் பங்களாப்புதூர் போலீசார் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.போலீசாரின் விசாரணையில் கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்;
கோபிச்செட்டிபாளையம் நாய்க்கன் காடு பகுதியை சேர்ந்த குமார்- மஞ்சுளாதேவி தம்பதியரின் மகள் ஸ்வேதா (21) என்பது தெரியவந்தது.ஸ்வேதா கோபியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்யூட்டர் சைன்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார், இவருக்கு ஒரு சகோதரர் உள்ளார்.அதே கல்லூரியில் டி. என். பாளையம் அடுத்த கொங்கர்பாளையம தண்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த வைதேகி-வீருச்சாமி தம்பதியரின் மகன் லோகேஷ் (23) என்பவர் அதே கல்லூரியில் ஸ்வேதா முதலாம் ஆம் ஆண்டு படித்து வந்த போது லோகேஷ் பிஎஸ்சி கம்யூட்டர் சைன்ஸ் மூன்றாம் ஆண்டு படித்துள்ளார்.அப்போது கல்லூரிக்கு வந்து செல்லும் போது லோகேஷ்-க்கும் ஸ்வேதாவு-க்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.ஸ்வேதா மூன்றாம் ஆண்டு படித்து வந்த நிலையில், மீண்டும் அதே கல்லூரியில் லோகேஷ் எம்எஸ்சி கம்யூட்டர் சைன்ஸ் படிப்பில் சேர்ந்து 2-ஆம் ஆண்டு படிப்பை முடித்தகோபியில் உள்ள தனியார் ஐ. டி கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார்.தொடர்ந்து இருவரும் காதலித்து வந்த நிலையில் லோகேஷ்-ம் ஸ்வேதா-வும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகி வந்துள்ளனர்.இருவரும் கொங்கர்பாளையம் பகுதியில் உள்ள லோகேஷின் பாட்டி வீட்டில் தனிமையில் சந்தித்தும் பேசி பழகி வந்தனர்.இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஸ்வேதா கர்ப்பம் தரித்து உள்ளார், இந்த விசயம் ஸ்வேதாவின் வீட்டுக்கு தெரிந்தால் விபரீதம் ஆகி விடும் என பயந்து போன ஸ்வேதா லோகேஷிடம் இது குறித்து கூறி திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி வந்துள்ளார்.லோகேஷ் தனது பெற்றோருக்கு இந்த விசயம் தெரிந்தால் பிரச்சனை ஆகிவிடும் எனவும், சரியான வேலை இல்லாததாலும் ஸ்வேதாவை திருமணம் செய்து கொள்வதில் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.வீட்டில் வாந்தி எடுத்து வந்த ஸ்வேதா கடந்த 28-ந்தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு லோகேஷ் உடன் காலை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கர்ப்பத்தை கலைக்கும் நோக்கில் பரிசோதனை செய்ய சென்றுள்ளார். ஆனால் தற்போது கருவை கலைக்க இயலாது என்று டாக்டர் தரப்பில் கூறியதாக தெரிகிறது.இதனால் மனமுடைந்த நிலையில் தாய் வீட்டுக்கு செல்ல முடியாமல் காணப்பட்ட ஸ்வேதாவை மதியம் சுமார் 3 மணியளவில் லோகேஷ் கொங்கர்பாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு ஸ்வேதாவை கூட்டி வந்துள்ளார்.சுவேதா அன்று மாலை சுமார் 5-மணியளவில் பெற்றோர் தொடர்பு கொண்டு பேசிய போது கோபி பேருந்து நிலையம் வந்து விட்டேன் வீட்டுக்கு வந்து விடுவதாக கூறியுள்ளார்.இதனையடுத்து ஸ்வேதாவும் லோகேஷ்ம் மாலை பேசிக்கொண்டு இருந்த போது உணவு வாங்கி விட்டு வருவதாக ஸ்வேதாவிடம் கூறிவிட்டு வெளியில் சென்று உள்ளார லோகேஷ் ன.உணவு வாங்கி விட்டு வந்து பாட்டி வீட்டில் லோகேஷ் வந்த பார்த்த போது ஸ்வேதா தனது துப்பட்டாவால் தூக்கு மாட்டி தொங்கி இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.இதை கண்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த லோகேஷ் ஸ்வேதாவின் கால்களை கட்டி வெள்ளை சாக்கு பையில் போட்டு வைத்துள்ளார்.இரவு சுமார் 9 மணிக்கு மேல் தனது மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் சாக்கு மூட்டையை வைத்து கொங்கர்பாளையம் தண்டு மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள தனியார் விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் கொண்டு சென்று வீசி விட்டு வீடு திரும்பினேன் என்று லோகேஷ் இவ்வாறு வாக்கு மூலத்தில் கூறியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.இந்நிலையில் கடந்த 28-ந்தேதி ஸ்வேதாவை காணவில்லை என அவரது தாயார் மஞ்சுளாதேவி கோபி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.முன்னதாக பங்களாப்புதூர் போலீசார் இந்த சம்பவத்தை (302) கொலை வழக்காகவும், (201) தடயங்களை மறைத்தல் என இரண்டு பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் ஸ்வேதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் ஸ்வேதா தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரிடம் தெரிவித்த நிலையில், முன்னதாக கொலை வழக்கு பதிவு செய்த பங்களாப்புதூர் போலீசார் தற்போது தற்கொலைக்கு தூண்டியதாக (306) மற்றும் தடயங்களை மறைத்தல் (201) என இரண்டு பிரிவில் லோகேஷ் மீது பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via