பாஜக தலைவரின் மகன் காரில் குண்டுவீச்சு

by Staff / 08-04-2023 12:30:25pm
பாஜக தலைவரின் மகன் காரில் குண்டுவீச்சு

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் மீண்டும் குண்டுவீச்சு சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த முறை பிரயாக்ராஜின் பாஜக பொதுச்செயலாளரான விஜயலட்சுமி சண்டேலின் மகன் விதான் சென்ற கார் மீது குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. கவுசாம்பியில் உள்ள காவல்நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டரின் மகன் இந்த சம்பவத்தை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த காலங்களில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், முன்பகை காரணமாக அவர் இந்த தாக்குதலில் நடந்ததாக கூறப்படுகிறது. பாஜக பிரமுகரின் மகன் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

Tags :

Share via