சிங்கப்பூர் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் இஸ்ரோ

by Staff / 19-04-2023 12:36:06pm
சிங்கப்பூர் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் இஸ்ரோ

சமீப காலமாக இஸ்ரோ தொடர் வெற்றிகளை பெற்று சாதனை படைத்து வருகிறது. இஸ்ரோ மற்றுமொரு வணிக ரீதியான விண்வெளி புரட்சிக்கு தயாராகியுள்ளது. ஏப்ரல் 22ஆம் தேதி, பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் மூலம் சிங்கப்பூர் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும். இந்த பரிசோதனையை ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ஷார்மில் இருந்து நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வரும் 22ஆம் தேதி பிற்பகல் 2.19 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர். சிங்கப்பூர் செயற்கைக்கோள் அனைத்து வானிலை செயற்கைக்கோள் படங்களையும் படம்பிடிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via