சங்கரய்யா இல்லத்திற்கு நேரில் சென்று முதல்வர் வாழ்த்து

by Editor / 15-07-2021 10:34:46am
சங்கரய்யா இல்லத்திற்கு நேரில் சென்று முதல்வர் வாழ்த்து

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சங்கரய்யா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். பின்னர் சங்கரய்யா குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், தமிழக அரசியல் தலைவர்களில் 100 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் மூத்த தோழர் சங்கரய்யா பொதுவாழ்வில் உள்ள அனைவருக்கும் வழிகாட்டும் தியாக வாழ்வுக்கு சொந்தக்காரராக அடையாளமாக விளங்குபவர். திராவிட இயக்கத்துடன் மக்கள் நலன் சார்ந்து இணைந்து நின்றவர் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சங்கரய்யாவுக்கு தமிழக அமைச்சர்கள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

 

Tags :

Share via