சட்டவிரோதமாக வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை  2 பேர் கைது  ரூபாய் 43 ஆயிரம் பறிமுதல்.

by Editor / 10-05-2023 11:44:01pm
 சட்டவிரோதமாக வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை  2 பேர் கைது  ரூபாய் 43 ஆயிரம் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர்கள்  ரத்தினவேல் பாண்டியன்  குமரேசன் மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர்   மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர்  செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. சாமுவேல், காவலர்  முத்துப்பாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர்  திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி உட்கோட்ட தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி 2வது ரயில்வே கேட் மற்றும் தூத்துக்குடி அம்பேத்கர்நகர் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தூத்துக்குடி அழகேசபுரத்தைச் சேர்ந்த கோட்டை பாண்டியன் மகன் சுரேஷ் (43) மற்றும் தூத்துக்குடி போல்பேட்டை பகுதியைச் சேர்ந்த பார்வதிநாதன் மகன் மாயக்கூத்தன் (எ) பெருமாள் (64) என்பதும் இவர்கள் சட்டவிரோதமாக வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

உடனே மேற்படி தனிப்படை போலீசார் எதிரிகளான சுரேஷ் மற்றும் மாயக்கூத்தன் (எ) பெருமாள் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 41 வெளிமாநில லாட்டரி சீட்டுகள், ஒரு செல்போன் மற்றும் ரொக்கப்பணம் ரூபாய் 43,450/- ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 

Tags :

Share via