நாளை முதல் ரூ.2000 மாற்றம் - ரிசர்வ் வங்கி அறிவுரை

by Staff / 22-05-2023 01:31:17pm
நாளை முதல் ரூ.2000 மாற்றம் - ரிசர்வ் வங்கி அறிவுரை

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வரும் பொதுமக்களுக்கு போதிய வசதிகளை செய்து தரவேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. குடிநீர், இருக்கை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாற்றும் 2,000 ரூபாய் நோட்டு வரவு தொடர்பான தினசரி தரவை கண்காணிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் ரூ.2000 நோட்டுகளை மாற்ற வங்கிகளில் சிறப்பு கவுன்டர்கள் வசதி அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 2000 நோட்டை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுரை கொடுத்துள்ளது.

 

 

Tags :

Share via