லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் என எந்த அதிகாரிகளும் இவர்களது அட்டூழியத்திர்க்கு மேல் நடவடிக்கை எடுப்பதாக இல்லை

by Editor / 07-09-2019 11:16:56pm
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் என எந்த அதிகாரிகளும் இவர்களது அட்டூழியத்திர்க்கு மேல் நடவடிக்கை எடுப்பதாக இல்லை

   தமிழக கேரள எல்லையான நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள புளியரையில் தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு சொந்தமான போக்குவரத்து சோதனைச் சாவடி உள்ளது. இந்த போக்குவரத்து சோதனைச் சாவடி வழியாக தினமும் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்களில் பல்வேறு சரக்குகள் 24 மணி நேரமும் ஏற்றிக் கொண்டு சென்று வருகிறது.இதில் அத்தியாவசிய பொருட்களான பால், அரிசி, காய்கறி,மூட்டை, பெட்ரோல், உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் அது போக சிமெண்ட் ,ஜல்லி, உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது, இந்த நிலையில் இந்த வழியாக போகும் அனைத்து வாகனங்களும் இங்கு உள்ள போக்குவரத்து சோதனைச் சாவடியில் பதிவு செய்து விட்டுப் போவதற்கு சிறிய வாகனத்திற்கு இருநூறு ரூபாயும், பெரிய வாகனங்களுக்கு 500 ரூபாயும், வாகனத்தின் தன்மையையும், சரக்கின் தன்மையை பொறுத்து ஒவ்வொரு வாகனங்களும் இங்கே கப்பம் கட்டிய செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர் .தொடர்ந்து இங்கு பணியாற்றும் ஆண் ஆய்வாளர் மற்றும் அவருக்கு கீழ் உள்ள இரண்டு உதவியாளர்கள் மட்டுமின்றி தற்காலிகமாக பணியாற்றும் சிலரும், புரோக்கர்களாக செயல்படும் சில நபர்களும் இந்த அலுவலகத்தில் சுமார் 10 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.இங்கே பணியாற்றும் இவர்கள் தினமும் கேரள செல்லும் சரக்கு வாகனங்களில் கட்டாய வசூல் நடத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அதை மெய்ப்பிக்கும் வகையில் இன்று ஒரு கேரள லாரி ஓட்டுனரிடம் அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர் குடிபோதையில் பணத்தை மிரட்டி கேட்கும் காட்சியும் ,அவருடன் இங்கே பணியாற்றும் ஆய்வாளரும் நின்று வேடிக்கை பார்த்து விட்டு போகிரார்.உதவியாளர்அவரது கையில் ஒருவர் பணம் கொடுக்கும் காட்சியும், அவரது இருக்கைக்கு முன்பு 500 ரூபாய் தாள் மேஜையில் இருப்பது வெட்ட வெளிச்சமான உண்மை. தொடர்ந்து இந்த சோதனைச்சாவடியில் தினமும் வாகன ஓட்டி களிடம் வாங்கி இலட்சக் கணக்கான ரூபாய் வசூல் ஆகி கொண்டு செல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகமோ..லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் என எந்த அதிகாரிகளும் இவர்களது அட்டூழியத்திர்க்கு மேல் நடவடிக்கை எடுப்பதாக இல்லை என்றும் வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Share via