குற்றால அருவியில் திடீர் காட்டாற்று வெள்ளம். 

by Editor / 05-07-2023 10:59:57pm
குற்றால அருவியில் திடீர் காட்டாற்று வெள்ளம்.  தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் தற்போது வரை பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்வீழ்ச்சிகள் மற்றும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், குற்றாலம் பகுதியில் உள்ள ஐந்தருவியில் காலை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தன. &nbsp;இந்த நிலையில், தற்போது குற்றாலம் மெயின் அருவியிலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.<br /> குறிப்பாக, இன்று காலை முதல் குற்றாலம் மெயின் அருவியில் பேரிக்கார்டுகளை வைத்து ஓரமாக விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதித்து வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த காட்டாற்று வெள்ளம் காரணமாக குற்றாலம் மெயின் அருவிலும் குளிக்க போலீசார் தடை விதித்தனர். அதேபோல், பழைய குற்றாலம் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேலும், மலைப்பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வருவதன் காரணமாக குற்றாலம் அருவியில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றால அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி காவல்துறையினர் பாதுகாப்பு பானி மேற்கொள்ளும் பாலம் வரை காட்டாற்று வெள்ளம் கொட்டி வருகிறது.இதன்காரணமாக அங்கு பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.இதேபோன்று பழையகுற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு படிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. குற்றால அருவியில் திடீர் காட்டாற்று வெள்ளம். 
 

Tags :

Share via