கிரேக்க தீவில்பெரும் காட்டுத் தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

by Writer / 23-07-2023 05:12:45pm
கிரேக்க தீவில்பெரும் காட்டுத் தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

கிரேக்க  தீவான  ஏதன், கிரீஸ் ரோட்சில் ஐந்தாவது நாளாக பெரும் காட்டுத் தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இதனால், அதன் அருகில் உள்ள ஓய்வு விடுதிகளை தங்கி உள்ளவர்களை அவசர அவசரமாக அரசு அதிகாரிகள் அப்புறப்படுத்தி வருகிறார்கள். இந்த காட்டுத் தீயானது முன்பு ஏற்பட்ட பொழுது உடனடியாககட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால்,காட்டுக்குள்வறண்ட வெப்ப  சூழ்நிலை நிலவுவதின் காரணமாக, இந்த தீவின் மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள கடற்கரை பகுதியை சனிக்கிழமை  தீ வேகமாக பரவியது. இந்த தீ மூன்று தங்கும் விடுதிகளையும் அதை சுற்றியுள்ள பகுதிகளையும் நெருங்கி வருவதால் அங்கு உள்ளவர்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டாா்கள். மூன்று விமானங்கள் மற்றும் ஐந்து ஹெலிகாப்டர் உதவியுடன் 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் 40 தீய அரசு இயந்திரங்கள் தீயணைப்பதற்காக போராடி வருகின்றன. மலை - கடற்கரை அருகே நெருப்பு பற்றி எாிவதால் மூன்று கடலோர காவல் படை கப்பல்கள், மேலும் ராணுவத்தில் ஒன்று இரண்டு கடற்கரைகளில் இருந்து மக்களை வெளியேற்றிக் கொண்டிருக்கின்றன 20 தனியார் படகுகளும் இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன கிரேக்க நாடும் ஒரு கப்பல் படையை அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது, ரோட்சியில் ஏற்பட்ட இந்த தீயானது கிரீஸ் முழுவதும் பரவக்கூடிய அபாயம் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

 

Tags :

Share via