நிலத்தை அளக்காததால் பிளக்ஸ் பேனர் வைக்க அனுமதி கேட்டு மனு வழங்கிய விவசாயி

by Editor / 25-07-2023 09:23:33am
 நிலத்தை அளக்காததால் பிளக்ஸ் பேனர் வைக்க அனுமதி கேட்டு மனு வழங்கிய விவசாயி


 தென்காசி தாலுகாவிற்கு உட்பட்ட பாப்பான்குளம் பஞ்சாயத்து மயிலப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா என்னும் விவசாயி தென்காசி மாவட்ட கலெக்டரிடம் மனு ஒன்றை வழங்கினார் அதில் கடந்த 2022 ஆகஸ்ட் 18ஆம் தேதி தனது சர்வே எண் 85 -14 நிலத்தை அளப்பதற்காக பணம் செலுத்தியதாகவும் பலமுறை தென்காசி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள நில அளவை பிரிவு சென்று எனது கோரிக்கையை தெரிவித்தும் இன்று வரை எந்தவிதமான பதில் தெரிவிக்காத காரணத்தினால் எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது என்றும் எனவே வருகின்ற 18/08/2023 வெள்ளிக்கிழமை அன்று தென்காசி வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது புகைப்படத்துடன் கூடிய டிஜிட்டல் பிளக்ஸ் பேனர் ஒரு வார காலம் வைத்துக் கொள்ள அனுமதியும்,எனக்கு பாதுகாப்பு வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். பிளக்ஸ் பேனரில் தென்காசி வட்டம் வடக்கு பாப்பான்குளம் கிராமம் சர்வே எண் 85-14 இடத்தை சர்வே செய்வதற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி அரசுக்கு பணம் செலுத்தி இருந்தேன் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் அரசு பணியை செய்கின்ற சர்வேயர் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோரை நான் மனதார பாராட்டுகிறேன் இப்படிக்கு கே. சுப்பையா மயிலப்பபுரம் வடக்கு பாப்பாங்குளம் கிராமம் செல் 9344673680 என்று வைத்துக்கொள்ள அனுமதி கேட்டு கோரிக்கை மனு வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via