பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 7 பேர் உயிரிழப்பு.

by Editor / 29-07-2023 11:45:17am
பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 7 பேர் உயிரிழப்பு.

கிருஷ்ணகிரி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வெடி விபத்தில் 3 வீடுகள் இடிந்து தரைமட்டமான நிலையில், கட்டிட  இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா..? என தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். இந்த விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.தொடர்ந்து போலீசார் முகாமிட்டு மீட்ப்புபணிகளை தீயணைப்புத்துறையினரையோடு மேற்கொண்டு வருகின்றனர். 

 

Tags :

Share via