கைத்தறி நெசவாளர்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில்கடனுதவிகள்

by Admin / 08-08-2023 12:16:30am
கைத்தறி நெசவாளர்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில்கடனுதவிகள்

திண்டுக்கல் மாவட்ட கைத்தறித்துறை சார்பில் 9வது தேசிய கைத்தறி தின விழாவை முன்னிட்டு திண்டுக்கல் வி.ஐ.பி. மஹாலில் அமைப்பட்டிருந்த கைத்தறி கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர்  திறந்து வைத்து, நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு ரூ.8.80 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது;-

கைத்தறி நெசவாளர்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அரசு சார்பில் தொழில் கடனுதவிகள் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 2015-ம் ஆண்டு முதல் சுதேசி இயக்கத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7-ம் தேதியன்று தேசிய கைத்தறி தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில், கைத்தறித்துறை சார்பில் இந்த ஆண்டு 9வது தேசிய கைத்தறி தின விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், கைத்தறி கண்காட்சி நடத்தப்படுகிறது. இக்கண்காட்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும். மென்பட்டு சேலைகள் . காட்டன் சேலைகள் . கோரா காட்டன் சேலைகள், வாழை நார் பட்டு சேலைகள் . Tie & Dye காட்டன் சேலைகள் . பம்பர் காட்டன் சேலைகள் உள்ளிட்ட கைத்தறி ஜவுளி ரகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தேசிய கைத்தறி தின விழாவை முன்னிட்டு, கைத்தறி நெசவாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்காக திண்டுக்கல் வி.ஐ.பி மஹாலில் சிறப்பு பொது மருத்துவ முகாம் மற்றும் நாகல்நகர் பகுதியில் உள்ள செந்தா மஹாலில் இலவச கண் பரிசோதனை முகாம் ஆகியவை நடத்தப்படுகிறது.

 விழாவில், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் நிரந்தரப் பணியாளர்களுக்கு மருத்துவ அட்டைகள், கைத்தறி ஆதரவுத் திட்டத்தில் நெசவாளர் கூட்டுறவு சங்க 5 உறுப்பினர்களுக்கு தலா ரூ.4,000 மதிப்பிலான தறி உபகரணங்கள், முத்ரா கடன் திட்டத்தின் கீழ் நெசவாளர் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள் 13 நபர்களுக்கு ரூ.8.60 இலட்சம் மதிப்பிலான கடன் தொகைகள் என மொத்தம் ரூ.8.80 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை நெசவாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி, தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர்  மொ நா.பூங்கொடி,அவர்கள் தெரிவித்தார்

கைத்தறி நெசவாளர்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில்கடனுதவிகள்
 

Tags :

Share via