சி.பி.ராதாகிருஷ்ணனுடன் ரஜினிகாந்த் சந்திப்பு

by Staff / 17-08-2023 12:28:08pm
சி.பி.ராதாகிருஷ்ணனுடன் ரஜினிகாந்த் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படம் இதுவரை 400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தின் வெளியீட்டுக்கு ஒருநாள் முன்னதாகவே ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டுச் சென்றுவிட்டார். இமயமலையில் உள்ள பல்வேறு ஆன்மிகத் தலங்களில் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற ரஜினிகாந்த் சி.பி.ராதாகிருஷ்ணனை இன்று சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினர் ரஜினிகாந்த்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

 

Tags :

Share via