பாஜகவில் இணைந்த நெல்லை முன்னாள் மேயர் புவனேஸ்வரி  

by Editor / 19-08-2023 11:33:50am
பாஜகவில் இணைந்த நெல்லை முன்னாள் மேயர் புவனேஸ்வரி  

திருநெல்வேலி மாநகராட்சியில் கடந்த 2011-ல் அதிமுக சார்பில் மேயர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜிலா சத்தியானந்த் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். புதிய மேயராக போட்டியின்றி புவனேஸ்வரி (அதிமுக) தேர்வு செய்யப்பட்டார்.இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின்னர் அதிமுகவிலிருந்து விலகிய  புவனேஸ்வரி 2021ல் தி.மு.க தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.இந்தநிலையில் புவனேஸ்வரி பாளையங்கோட்டையில் நடைபெற்ற பாஜகவின் என் மண் என் மக்கள் பயணத்தின் போது மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். (புவனேஸ்வரி நெல்லை மாநகராட்சியின் திமுக உறுப்பினராக இருக்கிறார்)
 

 

Tags : பாஜகவில் இணைந்த நெல்லை முன்னாள் மேயர் புவனேஸ்வரி  

Share via