சென்னையில் மழை. தமிழகத்தில் சிலமாவட்டங்களில் வாய்ப்பு. 

by Editor / 23-08-2023 07:36:49am
சென்னையில் மழை. தமிழகத்தில் சிலமாவட்டங்களில் வாய்ப்பு. 

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று  ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் சென்னையின் சில பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் கும்மிடிப்பூண்டி, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், உத்திரமேரூர், செய்யூர், மதுராந்தகம், சோளிங்கர், திருத்தணி, நெமிலி, தாம்பரம், வண்டலூர், செங்கல்பட்டு, குன்றத்தூர், வாலாஜாபேட்டை, அரக்கோணம், ஆற்காடு ஆகிய பகுதிகளில்  மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

Tags : சென்னையில் மழை

Share via