கழிவறை தண்ணீர் ஃப்ளஷ் தொட்டிக்குள் நாகப்பாம்பு

by Staff / 24-08-2023 04:28:05pm
கழிவறை தண்ணீர் ஃப்ளஷ் தொட்டிக்குள் நாகப்பாம்பு

கேரளாவின் திருச்சூர் திரிபிரயாரில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் உள்ள கழிவறையின் ஃப்ளஷ் டேங்கிற்குள் 5 அடி நீள நாகப்பாம்பு கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் நேற்று புதன்கிழமை நடந்துள்ளது. தகவல்களின்படி, சரியாக தண்ணீர் வராமல் இருந்துள்ளது. ஃப்ளஷ் டேங்கைச் சோதனை செய்த உடற்பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் பாம்பைக் கண்டு பதறிப்போயுள்ளார். இதையடுத்து தளிகுளம் தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீவிர முயற்சிக்கு பின் நாகப்பாம்பை பிடித்தனர். பாம்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர். இதற்கிடையில், பாம்பு எப்படி தொட்டிக்குள் நுழைந்தது என சந்தேகமடைந்துள்ளனர்.

 

Tags :

Share via