எழுத்தாளர் தேவிபாரதிக்கு முதலமைச்சர் வாழ்த்து

by Staff / 11-12-2023 01:20:57pm
எழுத்தாளர் தேவிபாரதிக்கு முதலமைச்சர் வாழ்த்து

சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வாகி உள்ள எழுத்தாளர் தேவிபாரதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், நொய்யல் மனிதர்களின் வாழ்வியலைத் தொன்மங்களின் துணையுடன் வரைந்து காட்டும் தம் எழுத்துநடையால் கவனம் பெற்ற எழுத்தாளர் ராஜசேகரன் தேவிபாரதி அவர்களின் 'நீர்வழிப் படூஉம்' நாவல் சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும் என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via