பாஜக நிச்சயம் தோற்கடிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

by Staff / 01-09-2023 01:59:09pm
பாஜக நிச்சயம் தோற்கடிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பாஜக நிச்சயம் தோற்கடிக்கப்படும் என்று மும்பையில் நடைபெற்று வரும் எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் இந்தக் கூட்டணியில் 28 கட்சிகள் உள்ள நிலையில், 3வது கட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று தொடங்கியது. இன்று நடைபெறும் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'இந்தியாவைக் காக்கப் போகும் இந்த இந்தியா கூட்டணியானது கடந்த 3 மாதங்களாக மிகுந்த ஒற்றுமையுடனும் கட்டுக்கோப்புடனும் செயல்பட்டு வருகிறது. நமது கூட்டணியின் பலத்தை விட, ‘இந்தியா’ என்ற பெயரே பாரதிய ஜனதா கட்சிக்குப் பயத்தையும் காய்ச்சலையும் உண்டாக்கி விட்டது' என்று கூறினார்.

 

Tags :

Share via