நாடாளுமன்ற தேர்தலில் பாஜக - ஜேடிஎஸ் கூட்டணி

by Staff / 08-09-2023 01:18:26pm
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக - ஜேடிஎஸ் கூட்டணி

நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் பா.ஜ.க - குமாரசாமியின் ஜேடிஎஸ் கூட்டணி உறுதியாகி உள்ளது. மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 24 தொகுதிகளில் பாஜகவும் நான்கு தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளமும் போட்டியிடும் என கூறப்பட்டுள்ளது. இரு கட்சிகளும் கூட்டணி அமைத்ததால் பா.ஜ.க.வுக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என கூறப்படுகிறது. கூட்டணியில் உள்ள குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சிக்கு 4 தொகுதிகளை ஒதுக்க அமித் ஷா ஒப்புதல் வழங்கியுள்ளார் என பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via