நிபா அச்சுறுத்தல் - தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்கள்

by Staff / 13-09-2023 12:56:12pm
நிபா அச்சுறுத்தல் - தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்கள்

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் கடந்த 2018-ம் ஆண்டு முதல் பரவ தொடங்கியது. இதுவரை நிபா வைரஸ் பாதிப்பால் சுமார் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து வைரஸை கட்டுப்படுத்த கேரள அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் 4 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் தொற்றால் உயிரிழந்தவரின் 9 வயது மகன் கவலைக்கிடமாக உள்ளார். இதனால், அம்மாவட்டத்தில் 7 பஞ்சாயத்துகளில் பொதுமக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, வெளியூர் சாலைகளும் மூடப்பட்டது.

 

Tags :

Share via