உலக அழகியாக 23 வயது கருப்பின ஜமைக்கா பெண் தேர்வு

by Editor / 15-12-2019 12:28:18am
உலக அழகியாக 23 வயது கருப்பின ஜமைக்கா பெண் தேர்வு

69-வது உலக அழகிப் போட்டியில் இந்தியா உள்ளிட்ட 120 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

உலக அழகியாக 23 வயது கருப்பின ஜமைக்கா பெண் தேர்வு

   லக அழகிப் போட்டியில் பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டு முதற்கட்டமாக 40 பேர் தேந்தெடுக்கப்பட்டனர். அதன் பிறகு 10 போட்டியாளர்கள் இறுதிசுற்றுக்கு தேர்வாகினர் மிகுந்த எதிர்பார்ப்புடனும், விறுவிறுப்புடனும் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஜமைக்கா நாட்டின் 23 வயது பெண் டோனி-ஆன் சிங் உலக அழகி பட்டத்தை வென்றார். அவருக்கு கடந்த ஆண்டின் உலக அழகி பட்டம் வென்ற மெக்ஸிகோவைச் சேர்ந்த வனேசா போன்ஸ் மகுடம் சூட்ட்டினார்.

2வது இடத்திற்கு ஓஃபெலி மெசினோ மற்றும் 3வது இடத்தை இந்திய அழகி பிடித்துள்ளார். 'மிஸ் இந்தியா' போட்டியில் வென்ற ராஜஸ்தானைச் சேர்ந்த சுமன் ரத்தன் சிங் ராவ் என்ற 21 வயது பெண் இந்தியா சார்பாக 'உலக அழகி போட்டியில் கலந்துகொண்டார்.

Share via