பாஜக எம்எல்ஏ தமிழ்செல்வத்திற்கு 6 மாதம் சிறை

by Staff / 31-10-2023 03:29:55pm
பாஜக எம்எல்ஏ தமிழ்செல்வத்திற்கு 6 மாதம் சிறை

மகாராஷ்டிராவை சேர்ந்த பாஜக எம்எல்ஏ தமிழ்செல்வத்திற்கு மும்பை நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது. தமிழரான இவர் 2017 ஆண்டு ஆண்டில் கவுன்சிலராக இருந்தபோது, சயான் பகுதியில் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பை நிறுத்த வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். இந்த வழக்கில் 6 பேருக்கு 6 மாதம் சிறையும், ரூ.13,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர் இந்த வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்யவும் நீதிமன்றம் அவகாசமும் அளித்துள்ளது. மகாராஷ்டிராவின் தானே, தாதர் உள்ளிட்ட பல பகுதிகளில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.

 

Tags :

Share via