முன்னாள் அமைச்சர் தங்கமணி டிஸ்சார்ஜ்

by Staff / 08-11-2023 05:03:59pm
முன்னாள் அமைச்சர் தங்கமணி டிஸ்சார்ஜ்

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த தங்கமணியிடம், அதிமுக மூத்த தலைவர்கள் நலம் விசாரித்து வந்தனர். காய்ச்சல் பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து இன்று தங்கமணி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், டெங்கு பரவலை தடுக்க சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

Tags :

Share via