சீமானுக்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன் வாழ்த்து

by Staff / 08-11-2023 05:01:33pm
சீமானுக்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன் வாழ்த்து

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 57-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அன்புத் தம்பி சீமானுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு வாழவும், அவருடைய நற்பணி சிறக்கவும் எல்லாம்வல்ல இறைவனைப் பிராத்திக்கிறேன் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். தான் கொண்ட கொள்கையில் தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் தொடர்ந்து பயணிக்கும் சீமான், நல்ல உடல்நலத்தையும், நீண்ட ஆயுளையும் பெற்று தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via