மீனவர்கள் கைது விவகாரம்: தமிழகத்திடம் மத்திய அரசு உறுதி

by Staff / 31-10-2023 04:20:24pm
மீனவர்கள் கைது விவகாரம்: தமிழகத்திடம் மத்திய அரசு உறுதி

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்திடக் கோரியும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள மீன்பிடிப் படகுகளைத் திரும்ப வழங்கிடக் கோரியும், இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வினை மத்திய அரசு விரைந்து காண வேண்டுமென்று வலியுறுத்தியும், மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி. முரளிதரனுக்கு, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின்பேரில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி. ஆர். பாலு , ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி மற்றும் ஆகியோருடன் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளிதரனை சந்தித்து, முதல்வர் எழுதிய கடிதத்தினை வழங்கினார். தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தினைப் பெற்றுக் கொண்டு, அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்த மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளிதரன் , இதுகுறித்து முதல்வரின் கடிதம் ஏற்கெனவே தங்களது துறைக்கு வந்துவிட்டது. அதனடிப்படையில் உரிய நடவடிக்கை ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இலங்கை அதிகாரிகளுடன் இது தொடர்பாக மத்திய அரசின் சார்பில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via