தமிழின் தொன்மையை கண்டு  வயிற்று எரிச்சல் ஏன்? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி 

by Editor / 29-07-2021 02:08:12pm
தமிழின் தொன்மையை கண்டு  வயிற்று எரிச்சல் ஏன்? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி 

 

 

தமிழின் தொன்மையை கண்டு வயிற்று எரிச்சல் ஏன்? என அமைச்சர் தங்கம் தென்னரசு 
கேள்வி எழுப்பி உள்ளார்.


மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது, 
கீழடி உள்ளிட்ட அகழாய்வில் தமிழின் தொன்மையை நிரூபிக்கும் வகையில் சான்றுகள் கிடைத்து வருகின்றன. 2 நாட்களுக்கு முன்பு கீழடியில் 146 செமீ பூமிக்கு அடியில் வெள்ளியிலான முத்திரை பதித்த காசு கிடைத்துள்ளது.


கீழடியில் கிடைத்த பொருட்களால் தமிழரின் தொன்மை கிமு.6ஆம் நூறாண்டுக்கு முந்தையது என தெரிய வந்துள்ளது. அகழாய்வு மூலம் தமிழகத்தில் அகச்சான்று, புறச்சான்று மற்றும் அறிவியல் சான்று நமக்கு கிடைத்து வருகிறது. தமிழின் தொன்மையை நிரூபிக்கும் வகையில் இத்தனை சான்றுகள் கிடைக்கின்றபோது, அதனை ஏற்றுக்கொள்வதற்கு சிலருக்கு மனம்வரவில்லை.
தமிழின் பெருமை, தமிழரின் பெருமை உலகளவில் வருவதில் சிலருக்கு வயிற்று எரிச்சல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு நன்றாக எரியட்டும். தமிழகத்தில் நடக்கும் தொல்லியியல் ஆய்வுகள் மூலம் தமிழின் பெருமையை எடுத்துரைக்கிறது. அவர்களுக்கு வயிறு எரிவதை பற்றி எங்களுக்கு கவலையில்லை, நாங்கள் தொடர்ந்து அகழாய்வு பணியை மேற்கொள்வோம்.


 தமிழ் நாகரிகத்தின் தொன்மையை, நாம் அடைந்திருக்கக் கூடிய சான்றுகள் வாயிலாக அறிவியல் பூர்வமாக தொடர்ந்து நிறுவோம் என்றும் சிலருக்கு வயிறு எரிவதால் அகழாய்வுகள் தேவையற்றது என எழுது கிறார்கள் என கூறினார்.

 

Tags :

Share via