லாரி டிரைவர்களுக்கு ₹35 ஆயிரம் அபராதம்

by Staff / 23-11-2023 04:33:09pm
லாரி டிரைவர்களுக்கு ₹35 ஆயிரம் அபராதம்

புதுச்சத்திரம் ஒன்றியம், புதன்சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை கூடுவது வழக்கம். இங்கு வாங்கப்படும் மாடுகள், இறைச்சிக்காக கேரளா கொண்டு செல்லப்படுகிறது. லாரியில் ஏராளமான மாடுகளை மிகவும் நெருக்கமாக ஏற்றி, அவற்றுக்கு உணவு, தண்ணீர் கொடுக்காமல் கொண்டு செல்லப்படுவதாக கலெக்டர் உமாவுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், விலங்குகள் வதை தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் தர்மராஜ் தலைமையிலான அதிகாரிகள், கடந்த சில வாரங்களாக புதன்சந்தையில் இருந்து லாரியில் மாடுகளை ஏற்றி கொண்டு வரும் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை கோட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி விஸ்வநாதன் டிரைவர்கள் ரவி, பெரியசாமி, மணிகண்டன், முருகேசன், குணசேகர், ஜெபருல்லா, கலி முல்லா, ரகீம் மொன்ட் ஆகியோருக்கு ₹34, 800 அபராதம் விதித்தார்.

 

Tags :

Share via