தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த பிரதமர்

by Staff / 25-11-2023 04:32:25pm
தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த பிரதமர்

தேஜஸ் விமானத்தில் எனது முதல் பயணம் வெற்றிகரமாக முடிந்தது என பிரதமர் மோடி தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் பிரதமர் மோடி இன்று பயணம் செய்தார். இதுகுறித்து X தளத்தில் அவர், "இந்த அனுபவம் நம்பமுடியாத அளவிற்கு இருந்தது. நான் வானத்தில் பறக்கும்போது, நம் நாட்டின் மீதான எனது நம்பிக்கை கணிசமாக உயர்ந்தது. மேலும், தேசத்தின் மீதான புதிய பெருமை மற்றும் நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்தியது" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via