குஜராத்தில் ஆலங்கட்டி மழை

by Staff / 26-11-2023 02:46:29pm
குஜராத்தில் ஆலங்கட்டி மழை

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் இன்று காலை வரலாறு காணாத வகையிலான ஆலங்கட்டி மழை பொழிந்துள்ளது.இந்த ஆலங்கட்டி மழையில் வழக்கமாக பெய்யக்கூடிய சிறிய ஐஸ் கட்டிகள் இல்லாமல், கோழி முட்டையின் அளவில் ஐஸ் கட்டிகள் மழையாக பூமியில் வந்து கொட்டியுள்ளன. இதனால் அப்பகுதியில் இருந்த ஆஸ்பெடாஸ் மேற்கூரைகள், கார்கள், பந்தல்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. மேலும் வெளியே சென்றவர்களின் தலைகளிலும் விழுந்துள்ளது. மக்களும் அதிசயமாக பார்த்தனர்.

 

Tags :

Share via