ஜெர்மனியில் மிகவும் பழமையான உயிரியல் பூங்காவில் தீ விபத்து

by Editor / 03-01-2020 01:04:56pm
ஜெர்மனியில் மிகவும் பழமையான உயிரியல் பூங்காவில் தீ விபத்து

ஜெர்மனியில் மிகவும் பழமையான உயிரியல் பூங்காவில் தீ விபத்து

ஜெர்மனி:

1975 ஆம் ஆண்டில் 2000 சதுர அடி பரப்பளவில் குரங்குகளுக்கு மட்டும் என்று ஒரு தனியாக ஒரு சரணாலயம் திறக்கப்பட்டது இதில் கொரில்லா சிம்பன்சி, ஒராங்குட்டான் ஆகிய 32 வகை குரங்குகள் பராமரிக்கப்பட்டு வந்தன.

புத்தாண்டு தினத்தன்று திடீரென சரணாலயத்தில் தீப்பிடித்து எரிந்தது சில நொடிகளிலே பூங்கா முழுவதும் தீ பரவத் தொடங்கியது.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ பரவி எரிந்து விட்டது. முதலில் அனைத்து குரங்குகளும்  உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி வந்தன அதன் பின்னர் 30 குரங்குகளும் தீயில் எரிந்து விட்டது உறுதி செய்யப்பட்டது இரண்டு சிம்பன்சிகள் மட்டுமே உயிரோடு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தீ பரவியதற்கு காரணம் என்னவென்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர் அதில் தடை செய்யப்பட்ட வான விளக்குகளால் தீ பரவியது கூறப்படுகின்றது.

இந்த உயிரியல் பூங்காவில் யானை ,சிங்கம் ,புலி, பறவைகள் என அனைத்து வகையான உயிரினங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றது மற்ற விலங்குகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை .

 

Share via