சட்டம் ஒழுங்கை காப்பது ராணுவத்தின் பணி அல்ல: நீதிபதி

by Staff / 11-12-2023 02:10:39pm
சட்டம் ஒழுங்கை காப்பது ராணுவத்தின் பணி அல்ல: நீதிபதி

சட்டம் ஒழுங்கை காப்பது ராணுவத்தின் பணி அல்ல என உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு பிரிவு 370 நீக்கப்பட்டது தொடர்பான வழக்கில் இன்று 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. அதில், போர் சூழல் காரணமாகவே சட்டப்பிரிவு 370 கொண்டுவரப்பட்டது. சிறப்பு சட்டப்பிரிவு 370 தற்காலிகமானது தான். இந்திய அரசியலமைப்பின் அனைத்து விதிகளும் ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 நீதிபதிகளில் ஒருவரான சஞ்சய் கிஷன் கவுல் தனது தீர்ப்பில், 'எதிரிகளுடன் போரிடுவதற்கே இந்திய ராணுவம் பயன்படுத்த வேண்டும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காக்கும் பணிக்கு அல்ல' என சுட்டிக் காட்டினார்.

 

Tags :

Share via