தனிப்பட்ட கருத்துக்களை கூறி யாரும் கட்சியின் பெயருக்கு கலங்கம் விளைவிக்க வேண்டாம் -எடப்பாடி

by Editor / 13-01-2020 11:50:24am
தனிப்பட்ட கருத்துக்களை கூறி யாரும் கட்சியின் பெயருக்கு கலங்கம் விளைவிக்க வேண்டாம் -எடப்பாடி

கூட்டணி வியூகங்கள் பற்றி கட்சித் தலைமை மட்டுமே      முடிவெடுக்கும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்                  ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளனர்.

தனிப்பட்ட கருத்துக்களை கூறி யாரும் கட்சியின் பெயருக்கு கலங்கம் விளைவிக்க வேண்டாம் -எடப்பாடி

சென்னை 

ஓ.பி.எஸ்., இபிஎஸ் இருவரும் சேர்ந்து கூட்டாக ஒரு அறிவிப்பினை அறிவித்திருந்தனர் அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: 

தேர்தல் கூட்டணியின் நிலை குறித்து தங்களின் தனிப்பட்ட கருத்துக்களையும் விமர்சனங்களையும் தேவையற்ற விவாதங்களையும் உருவாக்கி கட்சிக்கு கலங்கம் விளைவிக்கும் என்பதால் அதுபோன்ற செயல்களில் கட்சியினர் யாரும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

அதுமட்டுமல்லாமல் அரசியல் நிலைப்பாடுகள் அனைத்தும் செயற்குழு, பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டு அதற்கேற்ப தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருப்பதை நினைவில் கொள்ளுமாறு கட்சியினருக்கு ஓ.பி.எஸ்., இபிஎஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மக்கள் நல பணிகளை திறன்பட செய்து கட்சிக்கு பெருமை சேர்க்கும் செயல்களில் மட்டுமே கட்சி தொண்டர்கள் செயல்பட வேண்டும்.