கலைஞர் நூற்றாண்டு விழா தொடங்கியது

by Staff / 06-01-2024 04:47:30pm
கலைஞர் நூற்றாண்டு விழா தொடங்கியது

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு விழா பிரம்மாண்டமாக தொடங்கியது. சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மாலை 4 மணி அளவில் தொடங்கிய இந்த நூற்றாண்டு விழாவில் எண்ணற்ற நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர். சுமார் 6 மணிநேரம் இவ்விழா நடக்க உள்ளது. ரஜினி, கமல் இந்த விழாவில் கலந்துகொள்கின்றனர். இதில் சிம்பு, விஷால், விக்ரம் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை என தெரிகிறது.

 

Tags :

Share via