சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு சுவாமி தரிசனம் செய்ய பல மணி நேரம் ஆவதாக தகவல்.

by Editor / 07-01-2024 10:34:02pm
சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு சுவாமி தரிசனம் செய்ய பல மணி நேரம் ஆவதாக தகவல்.

கேரள மாநிலம் சபரிமலையில் தற்பொழுது மண்டல பூஜை முடிந்து மகர விளக்கிற்காக கடந்த 30ஆம் தேதி நடை திறக்கப்பட்ட தினத்தில் இருந்து தற்பொழுது வரை சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டு வருகின்றது.

 இணையதளம் வாயிலாக தரிசனம் செய்வதற்கு முன்பதிவு செய்திருந்தவர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. மேலும் சபரிமலையில் ஐயப்பனை தரிசிப்பதற்கு பத்து முதல் 12 மணி நேரம் வரை ஆவதாக ஐயப்ப பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 ஒரு நாளில் எத்தனை பக்தர்களை அனுமதிக்க முடியும் என்ற கணக்கில் இல்லாத நிலையில் தேவசம்போர்டு தினமும் ஒரு லட்சம் பேர் தரிசனம் செய்யலாம் என சொல்லிக் கொண்டிருக்கிறது ஆனால் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை  வருவதற்கு பக்தர்கள் 15 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் மேலும் கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க பக்தர்கள் பம்பையிலே தடுக்கப்பட்டு வருகின்றனர்.

 மேலும் வாகனங்கள் நிறுத்துமிடங்களும் ஆங்காங்கே வாகனங்களும் அடுத்து நிறுத்தப்பட்டு பல கிலோமீட்டர் தூரம் பக்தர்கள் நடந்து செல்லும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

 நீண்ட நேரம் காத்திருப்பிற்கு பிறகு 18 படி ஏறி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

 மேலும் சில நேரங்களில் குழந்தைகளோடு செல்லும் ஐயப்ப பக்தர்கள் சுமார் ஒரு 2 நிமிடம் சுவாமியை நின்று தரிசனம் செய்வதற்கு அங்கு இருக்கும் காவலர்கள் அனுமதி அளிக்கின்றனர். மேலும் ஐயப்ப பக்தர்கள் சுவாமி பார்ப்பதற்கு கூட ஐயப்ப பக்தர்களை நிற்க விடாமல் போலீசார் விரட்டும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

 கட்டுக்கடங்காத கூட்டம் சபரிமலையில் நீடித்து வருவதால் போலீசார் பக்தர்களை விரட்டுவதிலேயே குறியாக இருந்து வருகின்றனர்.

பல நூறு கிலோமீட்டர் கடந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய முடியாமல் விரட்டப்படும் சூழலும் எந்த ஆண்டும் அளவுக்கு இந்த ஆண்டு சபரிமலையில் நீடித்து வருவதாக ஐயப்ப பக்தர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் சுமார் 20 மணி நேரம் காத்திருக்கும் சூழலுக்கு ஏற்ப தங்களுக்கு தேவையான பொருட்களையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று பக்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

 மகர விளக்கு பூஜை நெருங்கி வருவதின் காரணமாக நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதின் காரணமாக பக்தர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செல்ல வேண்டும் என பிற பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சபரிமலையை நோக்கி தற்பொழுது தமிழகம் ஆந்திரா கர்நாடகா பக்தர்களை அதிகளவில் சென்று வருகின்றனர் மகர விளக்கு பூஜை நெருங்கி வருவதால் தமிழக பக்தர்கள் எண்ணிக்கை அங்கு அதிகரித்து வருகின்றது குறிப்பாக சபரிமலையில் முழுமையான ஈடுபாட்டுடன் பக்தர்களை சுவாமி தரிசனம் செய்வதற்கு தேவசம்போர்டு மற்றும் காவல்துறை முனைப்பு காட்டவில்லை என்கின்ற பெரும் குற்றச்சாட்டு பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பக்தர்களின் வரி அதிகரிப்பை தொடர்ந்து தேவசம் போடும் மாநில அரசும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கின்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

 

Tags : சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு சுவாமி தரிசனம் செய்ய பல மணி நேரம் ஆவதாக தகவல்.

Share via