கோவை வேளாண் பல்கலைக்கு விரைவில் கருணாநிதி பெயர்

by Editor / 02-08-2021 09:28:26am
கோவை வேளாண் பல்கலைக்கு விரைவில் கருணாநிதி பெயர்

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கு கருணாநிதி பெயர் வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.இது குறித்து வேளாண் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், அக்ரி மாதவன் தலைமையில், முதல்வருக்கும், பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வி செயலருக்கும் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. கோவை வேளாண் பல்கலை, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முயற்சியால் பல்கலை அந்தஸ்து பெற்றதால், அதற்கு கருணாநிதியின் பெயர் வைக்க ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, கோவை வேளாண் பல்கலைக்கு கருணாநிதி பெயர் சூட்டும் அறிவிப்பு விரைவில் வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via