கேலோ இந்தியா போட்டிகள் - அமைச்சர் உதயநிதி ஆய்வு

by Staff / 09-01-2024 02:18:23pm
கேலோ இந்தியா போட்டிகள் - அமைச்சர் உதயநிதி ஆய்வு

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் டென்னிஸ் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வரும் கேலோ இந்தியா ஏற்பாட்டுப் பணிகளை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாட்டில் கேலோ இந்தியா இளையோர் போட்டிகள் வரும் 19ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ள விளையாட்டு மைதானங்கள், அரங்குகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த போட்டிகளில் பங்கேற்கவுள்ள விளையாட்டு வீரர் - வீராங்கனையருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தர அதிகாரிகள், அலுவலர்களை அமைச்சர் கேட்டுகொண்டார்.

 

Tags :

Share via