பிரபந்தம் பாடுவதில் வடகலை - தென்கலை பிரிவினர் இடையே மோதல்.

by Editor / 18-01-2024 08:49:58am
பிரபந்தம் பாடுவதில் வடகலை - தென்கலை பிரிவினர் இடையே மோதல்.

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் என்பது பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம். இது சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முப்பதோராவது திவ்ய தேசமாகும்.இக்கோயிலில் பாஞ்சராத்திரம் ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன.

காஞ்சிபுரம் பழைய சீவரம் பகுதியில் பார்வேட்டை உற்சவத்தில் பிரபந்தம் பாடுவதில் வடகலை - தென்கலை பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது திடீரென கைகலப்பானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போது கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags : பிரபந்தம் பாடுவதில் வடகலை - தென்கலை பிரிவினர் இடையே மோதல்.

Share via