மம்தா இல்லாத கூட்டணியை நினைத்து பார்க்க முடியாது

by Staff / 24-01-2024 05:30:04pm
மம்தா இல்லாத கூட்டணியை நினைத்து பார்க்க முடியாது

அசாமில் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் போது செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், எதிர்க்கட்சி கூட்டணியின் முக்கிய தூணாக திரிணாமுல் காங்கிரஸ் விளங்குவதாக தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜி அவர்கள் இல்லாத INDIA கூட்டணியை யாராலும் நினைத்துப் பார்க்க முடியாது; மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தலில் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் சேர்ந்து போட்டியிடும் என்று அவர் கூறினார். நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என மம்மா பானர்ஜி அறிவித்து இருந்தார்.

 

Tags :

Share via