நிர்பயா வழக்கில் நீதி நிலைநாட்டப் பட்டதாக-பிரதமர் மோடி ட்வீட்

by Editor / 20-03-2020 11:46:04am
நிர்பயா வழக்கில் நீதி நிலைநாட்டப் பட்டதாக-பிரதமர் மோடி ட்வீட்

டெல்லியில் நிர்பயா மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான குற்றவாளிகள் நான்கு பேருக்கும் இன்று காலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது

இறுதியாக இன்று அதிகாலை 2.30 மணிக்கு குற்றவாளி பவன் குப்தா சார்பாக அளிக்கப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து தற்போது டெல்லி திகார் சிறையில் 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடும் பணியை பவன் ஜல்லாத் நிறைவேற்றினார்

நிர்பயாவுக்கு இறுதியாக நியாயம் கிடைத்திருக்கிறது. என் மகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பெண்களுக்கும் நீதி கிடைத்துள்ளது. எனது நாடு நீதியை பெற்றுத் தந்துள்ளது, ஒட்டுமொத்த தேசத்திற்கும் நீதி கிடைத்துள்ளது.

சிறையின் முன்பு திரண்ட பொதுமக்கள் இனிப்புகள் பரிமாறி கொண்டாடினர். தேசியக் கொடியுடன் வந்திருந்த சமூக ஆர்வலர்கள் ”பாரத் மாதா கி ஜெய்” எனக் கோஷம் எழுப்பிய மக்கள் உற்சாகமாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

Share via