நேட்டோவில் அதிகாரபூர்வமாக இணைந்த ஸ்வீடன்

by Staff / 08-03-2024 02:52:12pm
நேட்டோவில் அதிகாரபூர்வமாக இணைந்த ஸ்வீடன்

எதிர்பாராத விதமாக ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்த தாக்குதல் ஐரோப்பிய நாடுகளை பதற்றமடைய செய்தது. தங்கள் மீதும் ரஷ்யா படையெடுப்பு நடத்துமோ என்ற அச்சத்தில் பல்வேறு நாடுகள் முக்கிய நடவடிக்கைகளை எடுக்க தொடங்கின. இந்நிலையில் நேட்டோவில் இணைய கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்வீடன் விண்ணப்பித்திருந்த நிலையில் தற்போது அதிகாரபூர்வமாக நேட்டோவில் அந்த நாடு இணைந்துள்ளது. நேட்டோவில் மொத்தம் 31 நாடுக இருந்த நிலையில் 32வது நாடாக ஸ்வீடன் தற்போது இணைந்துள்ளது. இனி ஸ்வீடன் மீது எந்த நாடு படையெடுத்தாலும் இந்த 31 நாடுகளும் அதற்கு துணையாக நிற்கும்.

 

Tags :

Share via