அதானி விவகாரம் - மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ ரைடு

by Staff / 23-03-2024 12:59:18pm
அதானி விவகாரம் - மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ ரைடு

நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அனைத்து அம்சங்களையும் விசாரிக்க சிபிஐக்கு லோக்பால் ஆணையம் கடந்த 15-ம் தேதி உத்தரவிட்ட நிலையில், இந்த சோதனை நடத்தப்படுகிறது. இந்த விவகாரத்தில் மஹுவா மொய்த்ராவின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via