கிராமத்து கானக் குயில் .. பாக்கியாஸ்ரீ

by Admin / 28-03-2024 12:12:24am
கிராமத்து கானக் குயில் .. பாக்கியாஸ்ரீ

புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு குடியேறிய இளம் பாடகி தான் பாக்கியா ஸ்ரீ.. இளம் வயதில் இசை மீது கொண்ட நாட்டம் அவரை பாடகி யாக மாற்றியது.. ஒரு கிராமத்துக் குடும்பத்தின் சராசரி ஆசைகளில் ஒன்று தன் வீட்டுப் பிள்ளைகள் பட்டதாரியாக வரவேண்டும் என்பது .அப்படி ஒரு கனவின் வெளிப்பாடாக  பட்டதாரியாக முயற்சி செய்கையில்,  தன் கனவு- தன் லட்சியம் எதுவென்று புரிந்து கொண்டு... அதற்குத் தகுந்த   படிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று திருவையாறு இசைக் கல்லூரியில் இளங்கலை  இசை படிப்பை தேர்ந்தெடுத்து படிக்க.... சாதாரண குடும்பப் பின்னணி கொண்ட ....தினமும், ஒவ்வொரு ஊர் சந்தையிலும் பொருட்களை விற்பனை செய்து.. தன் குடும்பத்தை கரை சேர்க்கும் ஒருவரின் மகளாத்தான் பாக்கியா ஸ்ரீ.... இந்த இசை உலகத்தில் உள்ளே நுழைகிறார்.

இளநிலை இசையை பாடமாகக் கொண்டு படித்த .பின்னர் ,சென்னைக்கு வந்து, சென்னை இசை கல்லூரியில் மீண்டும் இசை படிப்பை தேர்ந்தெடுத்து பயில்கிறார். இதற்கிடையில் ,திருமணம் நடந்தேறுகிறது . தன் இசை படிப்பையும் இசை கனவையும் விட்டுவிடாமல் உறுதுணையாக இருக்கும் கணவர் என்கிற ஒரு ஆணினுடைய கையை பற்றி ....இசை உலகத்தில் முதல் அடியாக விஜய் தொலைக்காட்சியில் அடி எடுத்து வைக்கின்றார்

.பொதுவாக ,போட்டிகளில் வென்று பரிசுகளை பெறுவது என்பதற்கு உள்ளே பல்வேறு விஷயங்கள் அடங்கியிருக்கின்ற நிலையில்.... அவர் தன் திறமையை தொலைக்காட்சியில் காட்டினாரே... தவிர. பரிசுகளை வெல்லவில்லை. ஆனாலும், மனம் தளராமல் தம் இசை பயணத்தை தொடர்ந்து நிகழ்த்தி கொண்டு தான் இருக்கின்றார்.

இயக்குனராக வேண்டும் என்று கனவோடு வருகின்ற இளம்  படைப்பாளிகளுக்கு அவர்களுடைய குறும்படங்களுக்கு பாடல்களை பாடி கொடுப்பதும் ...தாம் வசிக்கும் பகுதியில் இசை கற்க கூடியவர்களுக்கு கர்நாடக இசையை கற்றுக் கொடுக்கும் இசை ஆசிரியராகவும் .....தன்னுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

பல்வேறு புகழ்பெற்ற ஆன்மீக பாடல்களை சமீப காலமாக பாடி கொண்டிருக்கும் பாக்கியா ஸ்ரீ ..ஒரு திரைப்படத்தில் ஒரு சில பாடல்களை பாடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, தன்னுடைய இசை பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறார்.

.கிராமத்தில் இருந்து வந்த இந்த கான குயில், இன்னும் சில வருடங்களில் ,தம் காந்தக் குரலால் அனைவரையும் வசீகரித்து ஆட்கொள்ளப் போவது உறுதி.

 

கிராமத்து கானக் குயில் .. பாக்கியாஸ்ரீ
 

Tags :

Share via