இலங்கைக்கு கச்சத்தீவை கொடுத்ததே இவர் தான் - முத்தரசன் காட்டம்

by Staff / 01-04-2024 03:08:04pm
இலங்கைக்கு கச்சத்தீவை கொடுத்ததே இவர் தான் - முத்தரசன் காட்டம்

வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “இந்த நாடாளுமன்ற தேர்தலானது இரண்டாவது சுதந்திரப் போராட்டம் போன்றது. பாசிசம் தோற்கடிக்கப்பட்டு இந்தியா கூட்டணி வெற்றி பெறும்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ‘இலங்கைக்கு கச்சத்தீவை கொடுத்தது இந்திரா காந்தி தான் ஆனால், மோடி நினைத்திருந்தால் இந்த 10 ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்டிருக்கலாம்” என குற்றம்சாட்டினார்.

 

Tags :

Share via