ஊரடங்கு தொடங்கியது முதல் அனைத்து ஆட்சியர்களும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

by Editor / 13-05-2020 07:08:10pm
ஊரடங்கு தொடங்கியது முதல் அனைத்து ஆட்சியர்களும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அம்மா உணவகம் மூலம் 7 லட்சம் பேருக்கு நாள் ஒன்றுக்கு உணவு அளிக்கப்படுகிறது

சென்னை:

ஊரடங்கு தொடங்கியது முதல் அனைத்து ஆட்சியர்களும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அம்மா உணவகம் மூலம் 7 லட்சம் பேருக்கு நாள் ஒன்றுக்கு உணவு அளிக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா தாக்கம் படிப்படியாக உயர்ந்து பின்னர் தான் குறையும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். கண்ணுக்குத் தெரியாத வைரஸ் எளிதாக பரவும் என்பதை தொடர்ந்து மக்களிடம் கூறி வருகிறோம். எனவே பொது மக்கள் ஒத்துழைப்பின்றி கொரோனாவை கட்டுப்படுத்துவது எளிதல்ல என்று முதல்வர் கூறியுள்ளார்.

Share via