காதலுக்கு தடையாக இருந்த காதலியின் தாயை கொல்ல வீடியோ கால் மூலம் டிப்ஸ் வழங்கிய மாப்பிள்ளை!  

by Admin / 06-08-2021 03:40:28pm
காதலுக்கு தடையாக இருந்த காதலியின் தாயை கொல்ல வீடியோ கால் மூலம் டிப்ஸ் வழங்கிய மாப்பிள்ளை!  



காதலுக்கு தடையாக இருந்த காதலியின் தாயை கொல்ல வீடியோ கால் மூலம் காதலன் ஆலோசனை வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியானாவின் பரிதாபாத் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு பெண்ணும் பையனும் காதலித்து வந்துள்ளனர். இவர்களும் மற்ற காதலர்களை போல சினிமா, பார்க் என ஊர் ஊராக சுற்றி உல்லாசமாக இருந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் பெண்ணின் தாயாருக்கு மகளின் காதல் விவகாரம் தெரியவரவே அவர் தனது மகளை கண்டித்துள்ளார். மேலும் அந்த வாலிபரை காதலிப்பதை நிறுத்த வேண்டுமென்று மிரட்டினார்.

 இதுகுறித்து அந்த பெண் இந்த தாயாரின் மிரட்டலை தன்னுடைய காதலனிடம் கூறிய போது, அவர் தங்களின் காதலுக்கு தடையாக இருக்கும் அவரின் தாயாரை கொலை செய்து விடுமாறும் அதற்கான ஐடியாவை தான் போனிலேயே வீடியோ கால் மூலம் தெரிவிப்பதாக கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

இதைகேட்ட அந்த பெண்ணும் தான் பெற்ற தாயை கொலை செய்வதற்கு ஒப்புக்கொண்டார். அதன் படி கடந்த ஜூலை 10 ம் தேதியன்று அவர் சில தூக்க மாத்திரைகளை வாங்கி வந்து அவரிடம் கொடுத்தார்.

 பின்னர் அவர் தன்னுடைய வீட்டிலிருந்து வீடியோ கால் மூலம் அவர் அந்த மாத்திரையை எப்படி லெமன் ஜூஸில் கலக்கி கொடுக்க வேண்டுமென்று லைவ் வாக ஆலோசனை வழங்கினார்.

அவர் கொடுத்த லைவ் ஆலோசனை படி அந்த பெண் தூக்க மாத்திரை கொடுத்து தாயாரை கொலை செய்தார். இதுகுறித்து பின்னர் போலீசாருக்கு தகவல் தெரியவே அப்பெண்ணின் வீட்டிற்கு விரைந்து வந்த  போலீசார் அவரையும், அவரது காதலனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via