ஐபிஎல்-ல் புதிய சாதனை படைக்கும் ரோகித் சர்மா

by Staff / 18-04-2024 04:40:56pm
ஐபிஎல்-ல் புதிய சாதனை படைக்கும் ரோகித் சர்மா

ஐபிஎல்-ல் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் எம்.எஸ்.தோனியுடன் இணையவுள்ளார் ரோகித் சர்மா. 249 ஆட்டங்களுடன், ஐபிஎல்-ல் அதிகம் விளையாடிய இரண்டாவது வீரராக தினேஷ் கார்த்திக்குடன் ரோகித் சர்மா இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டார். இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 18) நடைபெறவுள்ள போட்டியில் ரோகித் சர்மா விளையாடும் பட்சத்தில் ஐபிஎல்-ல் 250 போட்டிகளில் விளையாடிய இரண்டாவது கிரிக்கெட் வீரர் என்ற சாதனையைப் படைக்கவுள்ளார்.

 

Tags :

Share via