பிரதமர் மோடியிடம் நேரம் கேட்ட கார்கே

by Staff / 22-04-2024 04:31:32pm
பிரதமர் மோடியிடம் நேரம் கேட்ட கார்கே

காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதற்கு நேரம் ஒதுக்குமாறு கேட்டுள்ளார். பிரச்சாரங்களில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் தவறான கருத்துக்களை முன் வைப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விரிவாக விளக்குவதற்காக நேரம் கேட்டுள்ளார். இந்திய வரலாற்றில் எந்த பிரதமரும் மோடி அளவிற்கு பிரதமர் பதவியின் கண்ணியத்தை தரம் தாழ்த்தியது கிடையாது எனவும் அவர் விமர்சித்தார்.

 

Tags :

Share via