குடியரசுத்தலைவர் தனது ஊதியத்தை 30 சதவீதம் குறைத்து கொள்வதாக அறிவித்துள்ளார்.

by Editor / 16-05-2020 07:49:28pm
குடியரசுத்தலைவர் தனது ஊதியத்தை 30 சதவீதம் குறைத்து கொள்வதாக அறிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு முன் உதாரணமாக விளங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி:

குடியரசுத்தலைவர் மாளிகையை போல் புதுச்சேரி மாநில ராஜ்நிவாஸும் அனைத்து செலவுகளிலும் கடுமையான கட்டுப்பாட்டை முழுமையாக பின்பற்றும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவித் ஓர் ஆண்டுக்கு தனது ஊதியத்தை 30 சதவீதம் குறைத்து கொள்வதாக அறிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் விருந்து நிகழ்ச்சிகள், பூக்கள், அலங்காரம், உணவு உள்ளிட்டவற்றை குறைத்து, நாட்டு மக்களுக்கு முன் உதாரணமாக விளங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவுறுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து 

குடியரசுத்தலைவர் மாளிகையை போல் புதுச்சேரி மாநில ராஜ்நிவாஸும் அனைத்து செலவுகளிலும் கடுமையான கட்டுப்பாட்டை முழுமையாக பின்பற்றும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கிரண்பேடி தெரிவித்துள்ள கருத்தில்,

புதுச்சேரியில் உள்ள அனைத்து துறைகளும் சேமிப்பு செலவுகளை குறைத்தல் என குடியரசுத்தலைவர் சிக்கன நடவடிக்கையை பின்பற்ற அறிவுறுத்துகிறேன். நடப்பு ஆண்டு திட்டமிட்டப்பட்ட சம்பளம், ஓய்வூதியம், சுகாதாரம், கல்வி, ஏழைகளுக்கு இலவச அரிசி போன்ற அடிப்படையில் செலவுகள் இருக்க வேண்டும். இதுவரை பணத்தை இழந்து வரும் சேவைகளில் இருந்து வருமானத்தை திரட்டவேண்டும். இதுபற்றி அனைத்து துறைகளும் ஏற்கனவே எச்சரிக்கையாக உள்ளன.

குடியரசுத்தலைவர் மாளிகையை போல் ராஜ்நிவாஸும் அனைத்து செலவுகளிலும் கடுமையான கட்டுப்பாட்டை முழுமையாக பின்பற்றும். ஏற்கெனவே தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் பெறப்படும் சமூக பொறுப்புணர்வு நிதியை சமூக நிகழ்வுகளுக்கு செயல்படுத்துவதின் மூலம் நிதி செலவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி டெல்லி அலுவலகத்துக்கு புதிய கார் வாங்க மறுத்தேன். கார் வாங்குவதை தொடர வேண்டாம் என்று கொரோனா சூழல் உருவாகும் முன்பே தெரிவித்துவிட்டேன். அதேபோல் எனது மாத ஊதியத்தில் மூன்றில் ஒருபங்கை பிரதமர் நிதிக்கு நன்கொடையாக தரப்படுகிறது.

குடியரசுத்தலைவர் முழு நாட்டுக்கும் சரியான முன்மாதிரி திட்டத்தை முன் வைப்பதை கண்டு நான் மகிழ்வடைகிறேன். இது பல சவால்களை கூட்டாக எதிர்கொள்ள உதவும் என தெரிவித்துள்ளார்.

 

Share via