பிரபல நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா

by Editor / 12-07-2020 10:18:38am
பிரபல நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா

இந்தி திரைப்பட உலகின் முடிசூடா மன்னனாக திகழும் பிரபல பாலிவுட் நட்சத்திரம்  அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய்யப்பட்டுள்ளது.  தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமிதாப்பச்சனும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . 

அமிதாப்பச்சன் மகனும் நடிகருமான அபிசேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அபிஷேக் பச்சன் தனது டுவிட்டர் பதிவில் நேற்று வெளியிட்ட பதிவில், “ எனக்கும் எனது தந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவருக்குமே லேசான அறிகுறிகளே தென்பட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறோம்.

எங்கள் குடும்பத்தினர் மற்றும் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். அனைவரும் அமைதியாக இருங்கள். அச்சப்பட வேண்டாம்” என்று பதிவிட்டு இருந்தார்.

Share via